அம்பாறை மருதமுனை 65 மீற்றர் சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில், வெள்ள நீர் வடிந்தோடக் கூடிய வகையில், வடிகான்கள் அமைக்கப்பட்டு வரும்
நிலையில், பணிகளை கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் பார்வையிட்டார்.
65 மீற்றர் சுனாமி மீள்குடியேற்றக் கிராம மக்கள், மழை காலங்களில் வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு
முகங்கொடுத்த வந்தனர்.
முறையான வடிகாலமைப்பு வசதிகளை மேற்கொண்டு, வெள்ளப் பாதிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துத் தருமாறு, இக் கிராம மக்கள் நீண்ட காலமாக கோரியிருந்த நிலையில், அவர்களது நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக, கல்முனை மாநகர சபையால், வடிகாலமைப்பு வசதிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
இப் பணிகளைப் பார்வையிட்ட மாநகர ஆணையாளர், துரித கதியில் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு, உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை
விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபை தமது பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத் தந்திருப்பதையிட்டு இக் கிராம மக்களும் நலன் விரும்பிகளும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.