அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு இம்முறை 555,432 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அம்பாறை தேர்தல் தொகுதியில் 188,222 வாக்காளர்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99,727 வாக்காளர்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 வாக்காளர்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 184,653 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 528 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்பாறை தேர்தல் தொகுதியில் 184 வாக்களிப்பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்களிப்பு நிலையங்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்புக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் வாக்கு என்னும் பணி அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இடம்பெறவுள்ளது.