28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரசாங்கத்திடம் பொருளாதாரம் தொடர்பில் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை!

ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கத்திடம் உள்ள வேலை திட்டங்கள் என்ன என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான சாரம்சத்தையாவாது வெளியிடுவதாக
நேற்றைய தினம் அமைச்சர் திணேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்விடயம் தொடர்பில் அமைதியாக இருக்கும்போது அரசாங்கத்திடம் பொருளாதாரம்
தொடர்பில் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை என்பது தெரிய வருகின்றது.
வரிசை யுகத்தை நிறுத்துவதற்கும் அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் இல்லை.
அரசாங்கத்துக்குள் அரசியல் ரீதியான சூதாட்டம் ஒன்று இடம்பெற்று வருவதே தெரிகிறது.
சிலர் ஜனாதிபதியிடம் சென்று ஜனாதிபதியை பதவி விலகுமாறும் பிரதமரை இருக்குமாறும் கூறுகின்றனர்.
சிலர் பிரதமரிடம் சென்று பிரதமரை செல்லுமாறும் ஜனாதிபதியை இருக்குமாறும் கூறுகின்றனர்.
அதன்பின்பு குழுவை கூட்டி 88 பேர் கையொப்பமிட்டு எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என்று கூறினர்.
பூரண நம்பிக்கைக்கு 113 இருக்க வேண்டும். 225இல் 113 சென்றால் எத்தனை என்று தெரியாத
குழுவொன்றே பதவியில் உள்ளது.
நூற்றுக்கு 50 சதவீதம் தெரியாத குழுவே உள்ளது.
நாங்கள் கொரோனா தடுப்பூசியை கொண்டுவாருங்கள் என்று கூறும்போது ஒரு சிலர் பானைகளை
ஆற்றில் விட்டனர். அந்த தரப்பினரும் தற்போது சபையில் உள்ளனர். அவர்களுக்கும் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதன் பின்னர் கொரோனா பானிக்கு பின்னால் செல்வோம் என்றார்கள். இவை அனைத்தையும்
செய்த பின்பு என்ன நடத்தது. தடுப்பூசியின் விலை அதிகரித்தது.
நாட்டுக்கு தடுப்பூசியை முதலில் கொண்டுவந்திருக்க வேண்டும். எனினும் என்ன நடந்தது.
தடுப்பூசியின் விலை அதிகரிக்கும் வரை இருந்தார்கள்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதற்கே காத்திருந்தனர். ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு
பார்த்துக்கொண்டிருந்தனர்.
கொரோனா தொற்றின்போதும் கொள்ளையடித்தனர். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள போதிலும் கொள்ளையடித்தனர்.
பணத்தை கொள்ளையடிக்கும் அரசாங்கமே ஆட்சயில் உள்ளது.
உழல் மோசடிகளை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் என்ன என்றே
கேட்கவிளைகின்றேன்.
கொள்ளையடித்த பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்திடம் உள்ள
வேலைத்திட்டம் என்ன என்று சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles