தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்பீட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
இந் நிலையில் இது தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் நேற்று இரவு ஒளிபரப்பான தனியார் ஊடக விவாத நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது தான் மிகுந்த கவலை அடைவதாகவும் அரவிந்தகுமாரின் செயலுக்கு அவர் எதிர்காலத்தில் கவலையடைவார் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரும், ரிஷாட் அணி உறுப்பினர்கள் இருவரும் ’20’ ஐ ஆதரித்து வாக்களித்துள்ளனர்.