அவுஸ்திரேலிய அணிக்கு 534 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

0
76

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸிங்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் யசஸ்வி ஜெய்ஸ்வால் 161 ஓட்டங்களையும் விராட் கோலி 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.