எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தாங்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருப்பதால் அக்கூட்டங்களில் கலந்துகொள்வதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தற்போதைய ஜனாதிபதியும் ஆதரவு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.