ஆசிரியரின் கத்திக் குத்துக்கு இலக்காகி மாணவி பலி!

0
7

தென் கொரியாவில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் எட்டு வயது சிறுமியைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் உள்ள கட்டடமொன்றின் இரண்டாவது மாடியில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் சிறுமி ஒருவரை மீட்டுள்ளனர். சிகிச்சைகளுக்காக சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய பெண் ஆசிரியைஇ ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறினர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் என தென்கொரிய இடைக்கால ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை வலியுறுத்தினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.