27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆனையிறவில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு

ஆனையிறவுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஏ – 9 வீதியில் ஆனையிறவுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோவும் பெற்றோலி யக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்த மான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் யாழ்ப்பாணம், நீராவியடிப் பகுதியை சேர்ந்த 58 வயதான இராதாகிருஷ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஓட்டோவில் பயணித்த தாயும் மகனும் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கியைச் செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் அணியில் சேர வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது.காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்;.எம்.ஸாஜஹான் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் அணியில் சேர வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது.காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்;.எம்.ஸாஜஹான் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்...

மட்டக்களப்பு கிரான் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு கிரான் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக இன்று நடைபெற்றது.பழைய இயக்குனர் சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய இயக்குனர் சபையானது அண்மையில் தெரிவு...

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பது வருடகால பூர்த்தியை முன்னிட்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.பாடசாலை அதிபர் எச்எம்எம். பஷீர் தலைமையில் நடைபெற்ற...