ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்

0
163

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா அருகே குண்டுவெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குருத்வாராவில் சிக்கியுள்ள பக்தர்கள், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குருத்வாராவின் வாசல் அருகே நடந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆப்கானை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து, அருகில் இருந்த கடைகள் தீப்பிடித்து எரிந்தன.குருத்வாராவிற்குள்ளும் தீப்பிடித்து எரிவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
குருத்வாராவிற்குள் இரண்டு பயங்கரவாதிகள் உள்ளே இருந்ததாகவும் அவர்களை தலிபான் படையினர் பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த துவங்கிய போது சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் என 30 பேர் உள்ளே இருந்தனர். குண்டுவெடித்ததை தொடர்ந்து 15 பேர் தப்பி சென்றனர். பின்னர் 3 பேர் வந்ததில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருத்வாரா பாதுகாவலராக இருந்த அஹமது என்பவர் உயிரிழந்தார். இன்னும் சிலர் குருத்வாராவிற்குள் சிலர் சிக்கி உள்ளனர்.