ஆரியகுளம் முற்போக்கு வாலிபர் கழகத்தினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இடம்பெற்றது
வட பகுதியில் தற்போது குருதி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆரியகுளம் முற்போக்கு வாலிபர் கழகத்தினரின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை வைத்தியசாலை இரத்த வங்கியினருக்கு இன்றைய தினம் குருதிக்கொடை வழங்கி வைக்கப்பட்டது
தெல்லிப்பழை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் என்.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குருதிக்கொடை வழங்கினர்