ஆர்சிபி அணிக்கு வந்து கோப்பை வென்று கொடுங்கள் என ஆர்சிபி ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த நிலையில், அதற்கு தோனி வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஆர்சிபி ரசிகர் ஒருவர் தோனியிடம் ஒரு கேள்வி கேட்டார்.’நான் 16 வருடங்களாக ஆர்சிபி அணியின் தீவிர ரசிகராக இருக்கிறேன். நீங்கள் சிஎஸ்கேவுக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கப்டனாக இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் ஆர்சிபிக்கு வந்து, ஒரு கோப்பையை வென்றுகொடுக்க கூடாது?’ எனக் கேட்டார்.அதற்கு பதிலளித்த தோனி, ”ஆர்சிபி மிகச்சிறந்த அணியாக இருக்கிறது. கிரிக்கெட்டில், எப்போதுமே நாம் நினைத்தது நடக்காது. 10 அணிகளிலும் தரமான வீரர்கள்தான் இருக்கிறார்கள். ஒரேயொரு குறை என்னவென்றால், சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடிவதில்லை.இதுதான், சில அணிகளுக்கு பின்னடைவாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கோப்பை வெல்லும் வாய்ப்பு 100 சதவீதம் இருக்கிறது.”என்னுடைய அணியிலேயே சில குறைபாடுகள் இருக்கிறது. அந்த சவால்களை சமாளிக்க வேண்டும். நீங்கள் நினைத்து பாருங்கள், நான் வேறு அணிக்கு சென்று, அந்த அணிக்கு ஆதரவு அளித்தால், எங்கள் (சிஎஸ்கே) அணி ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்?” என தோனி வௌிப்படையாக பேசினார்.