ஆஸிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்தியா முதலில் துடுப்பாட்டம்

0
11

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘பார்டர் – கவாஸ்கர்’ கிண்ணத்துக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் பகல் – இரவு போட்டியாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் சற்றுமுன் தொடங்கியது.

இந்த ஆட்டத்துக்குக்கான நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளார்.

இந்திய அணியில் 3 மாற்றங்களாக துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் படிக்கல் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணியில், ஜெய்ஸ்வால், கே. எல். ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (தலைவர்), நிதிஷ் ரெட்டி, அஸ்வின், ஹர்ஷித் ராணா, பும்ரா, சிராஜ்.

அவுஸ்திரேலிய அணியில், உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் சுமித், ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் ஹரி, பட் கம்மின்ஸ் (தலைவர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலந்து ஆகியோர் விளையாடுகின்றனர்.