இங்கிலாந்தில் கொரோனா தொற்று மீளவும் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துச் செல்வதை அடுத்து நான்குவார முடக்கநிலையை அறிவித்தார் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்.
இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நான்கு வார காலத்திற்கு முடக்க நிலை அமுலில் இருக்கும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்த முடக்கநிலை காலத்தில் அத்தியாவசியமற்ற மதுபானசாலைகள், விருந்தினர் விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி மையங்கள் மூடப்படும்.எனினும் விநியோக சேவைகள் தொடர அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் விசேட தேவை, குறிப்பாக பணி நிமித்தம் மற்றும் கல்வி நடவடிக்கை, அத்தியாவசிய பொருள் கொள்வனவு, மருத்துவ தேவை , மற்றும் விசேட தேவையுடையோருக்கான பராமரிப்பு ஆகியவற்றுக்கே வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.
பொதுமக்கள் ஒருவரை ஒருவர் வதிவிடங்களிலோ அல்லது தனியார் தோட்டங்களிலோ சந்திக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.
அத்துடன் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.