இந்தியப் பிரதமர் ரஷ்;ய ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் தமது அதிருப்தியை பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவினால் யுக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 37 பேர் உயிரிழந்ததையும் 13 சிறுவர்கள் உட்பட 170 பேர் காயமடைந்ததையும் விளாடிமிர் செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நாளில் பாரிய ஜனநாயக நாடொன்றின் தலைவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டமை தொடர்பில் அதிருப்தி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
22 ஆவது ரஷ்ய – இந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ரஷ்யாவுக்கு 2 நாள் விஜயம் மேற்கொண்டதுடன் தொடர்ந்து ஒஸ்ரியாவிற்குப் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.