32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்தியாவிலிருந்து முட்டைத் தொகுதி அடங்கிய கப்பல் நாளை இலங்கை வருகை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முட்டை இருப்புக்கள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் முட்டைகளை பேக்கரி தொழிற்சாலைகளுக்கு 40 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles