இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ YOUTUBE சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. உச்சி நீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் குறித்த சேனலில் தற்போது க்ரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் இந்தியாவில் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளதுடன், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.