இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர்

0
73

டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கையோடு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக் காலம் முடிவிற்கு வந்தது. புதிய பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கவுதம் கம்பீர், WV ராமன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கதாநாயகன், 2024 ஐ.பி.எல். சாம்பியன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரூட்டு தல என பல பெருமைகளைப் பெற்றுள்ள கெளதம் கம்பீர் தற்போது இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் வரும் 27-ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் இணைந்து தனது பயிற்சியாளர் பதவியை தொடங்க உள்ளார் கவுதம் கம்பீர்.