இந்தோனேசியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 27பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகருக்கு செல்லும் வீதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டதால் பஸ்ஸில் இருந்த சாரதி உள்பட 7 பேர் உயிரிழந்ததுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரிக் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.