செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளில் புதிதாக 6 என்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் 4 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 65 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 31 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 04 என்புக்கூட்டு தொகுதியுடன் சேர்த்து, இதுவரை 130 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 141 என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.