29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

புலம்பெயர் வாழ்க்கை என் பது அனுபவித்தவர்களால் மாத்திரமே புரிந்துகொள்ளக் கூடியது. புலம்பெயர் நாட்டி லிருந்து ஒலிபரப்பான வானொலி ஒன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒருவரை அண் மையில் சந்தித்தபோது அவர் கூறிய சம்பவம் ஒன்று இப் போது நினைவுக்கு வருகின்றது.
தமது வானொலியில் ஒரு நிகழ்ச்சி ‘உறவுப்பாலம்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாகியதாம். அதில், புலம்பெயர்ந்து வாழும் ஒருவர் தனது நண்பர் ஒருவரையோ அதிகம் ஏன் உறவினர்களைக்கூட அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெரியாமல் வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.
இத்தகையவர்கள் தமது நண்பர்களை உறவுகளைத் தேடும் நிகழ்ச்சி அது. தொலை பேசி வழியே நிகழ்ச்சியில் இணைந்து கொள்பவர் தான் தேடுபவர் பற்றிய விவரங்களைக் கூறுவார்.
அதனை கேட்டுக் கொண்டிருக்கின்ற யாராவது இவர் தேடுகின்றவர்களை தெரிந்திருந்தால் உடனேயே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு (தொலைபேசி வழி யாக) அவர் பற்றிய தகவல்களை சொல்லாம்.
இதுவே அந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஊடாக பாடசாலைகளில் படித்த தமது நண்பர்கள், தமக்கு கற்பித்த ஆசிரியர்கள் என்று பலரையும் பலர் தேடிக்கண்டுபிடித்து உறவாடி வருகின்றனராம்.
ஒரு நாள் கனடாவிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டு தனக்கு முதலாம் வகுப்பில் படிப்பித்த அந்த ஆசிரியையை தன் வாழ்நாளில் ஒரு தடவை யாவது பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் என்று அந்த ஆசிரியையின் விபரங்க ளையும் கூறி, அவர் கதைத்துக் கொண்டிருந்தபோது மறு தொலைபேசி அழைப்பில் அந்த ஆசிரியை நிகழ்ச்சியில் இணைந்துகொண்டுவிட்டார்.
இருவரும் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் கதைக்க முடியா மல் திண்டாடிவிட்டு, கதைக்க தொடங்கினர். ஆசிரியையும், கடந்த பத்து வருடமாக கனடா வில்தான் வசித்து வருவது பற்றியும் தான் எங்கே இருக்கி றார் என்பது பற்றியும் சொல் லியபோது அவரின் மாணவன் சொன்னார், ‘ஐயோ ரீச்சர் நீங் கள் இருக்கிற அதே அப்பார்ட் மண்டிலைதான் நானும் பதி னைஞ்சு வருசமாக இருக்கிறன்.’ என்று.
இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்றால், புலம் பெயர் வாழ்க்கை என்பது எத்த கையது என்பதை சொல்வதற் காகவே. புலம்பெயர் மண்ணில் ஒரு கலை நிகழச்சியோ அல்லது அரசியல் நிகழ்ச்சியோ நடை பெறுகின்றது என்றால் அதனை பார்ப்பதற்காக செல்வதைவிட, அங்கு வரும் தமது நண்பர்களை சந்திக்கவும் அவர்களோடு சில மணிநேரங்களை செலவிடுவ தற்காகவும் செல்பவர்களே அதிகம்.
அண்மையில், கனடாவுக்கு சென்றிருந்த தேசிய மக்கள் சக்தி யின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜே. வி. பி. தலைவருமான அநுரகுமார திஸநாயக்காவின் சந்திப்புக்கு மண்டபம் நிரம்பிய மக்கள் கூடியிருந்தனர். சுமார் ஆயிரம் பேரில் அறுநூறுக்கு அண்ணளவானவர்கள் தமி ழர்கள். மிகுதிப்பேர் சிங்கள சகோதரர்கள்தான். அவர்கள் ஜே. வி. பியின் ஆதரவாளர்களா அல்லது நான் மேலே சொன்னதுபோல கூடியவர்களா என் பது தெரியவில்லை.
ஆனால், எண்பதுகளில் ஜே. வி. பி. இயக் கத்துக்கு எதிராக சிறீலங்கா அரசு, அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டபோது அதன் ஆதரவாளர்கள், போரா ளிகள் என்று பலரும் புலம் பெயர்ந்திருந்தனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் கணிசமான அளவினர் இப்N பாது கனடாவில் வாழ்ந்து வரு கின்றனர்.
அவர்களில் மிக உச்ச நிலையில் அங்கு வாழ்பவர்கள் அதிகம். அதனால் அங்கு வந்திருந்தவர்களில் கணிசமான வர்கள் ஜே. வி. பியின் ஆதரவா ளர்களாகவும் இருக்கலாம்.
மண்டபம் நிரம்பிய மக்கள் கூட்டத்தைக் கண்டதும் தோழர் அநுர சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டார் என்றே அந்தக் கூட்டத்தை பற்றி அறி கின்றபோது தெரியவந்தது. நேற்றைய ஈழநாடுவில் ‘பனங்காட்டான்’ எழுதிய கட்டு ரையில் அந்த விடயத்தை சுட் டிக்காட்டியிருந்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் அநுரவின் பேச்சை தமிழில் கேட்பதற்கு வசதியாக போனில் தரவிறக்கம் செய்ய ஒரு செயலி அறிமுகம் செய்யப் பட்டிருந்ததாம். அதாவது மொழிபெயர்ப்பு தேவையான வர்கள் அந்த செயலி மூலம் அவரது உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை கேட்க வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் பேசத் தொடங்கியதுமே, அது ‘மக்கர்’ பண்ணத் தொடங்கிவிட்டது. இதனால் அவரின் பேச்சை கேட்க விரும்பிய தமிழர் ஒருவர் எழுந்து நின்று செயலி வேலை செய்யவில்லை என்றும் இத னால் தமிழில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்யுங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதற்கு மேடையிலிருந்த ஒருவரிடமிருந்து வந்த பதில், ‘எலியட்ட தாண்ட’ என்பதே. அதாவது தமிழ் மொழி பெயர்ப்பை கோரியவரை மண் டபத்துக்கு வெளியே போகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதனை மிக அமைதியாக பார்த்துக்கொண்டு கடந்து போயிருக்கிறார் நமது அநுர குமார. ஆகக்குறைந்தது, தமிழ் மொழிபெயர்ப்பு வழங்க முடியாததற்கு மன்னிப்புக்கூட கேட்கவில்லை என்பது அவரும் ‘இவர்தான்’ என்பதையே வெளிப்படுத்துகின்றது. எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வரும் அநுர, தனது பேச்சுக்கு இங்காவது மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்வார் என்று நம்புவோம்.!

  • ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles