இப்போதெல்லாம் யார் தொலைபேசி அழைப்பை எடுத்தாலும், அந்த ஒரு விடயம் பற்றியே பேசுகிறார்கள் அல்லது கேள்வி கேட்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக அதிகம் பேசுவது ஈழநாடு பத்திரிகையும் அதன் குழுமத்தைச் சேர்ந்த டான் ரி.வியும்தான் என்பது தெரிந்ததுதான். அதனால் இந்த ஊர்க்குருவியுடன் பேசுகின்றவர்கள் பலரும் அனேகமாக எல்லோருமே கேட்பது, அது சாத்தியமாகுமா என்பது பற்றித்தான்.
நேற்று லண்டனிலிருந்து பேசிய நீண்டகால நண்பர் ஒருவர், அங்கு நடந்த ஒரு கூட்டத்தில் தான் சந்தித்த சிலர், அதுபற்றி கலந்து ரையாடியதாகவும், அவர்களில் ஒருவர், இந்த விடயத்தில் ஈழநாடு – டான் ரி.வி அக்கறைகாட்டுவது தான் சந்தேகத்தை தருகின்றது என்றாராம்.
அவர் அப்படி தெரிவித்தபோது அங்கிருந்த வேறு சிலரும் அதனை ஆமோதிப்பது போல பேசியதாகவும் கூறினார் நண்பர். அவரது சந்தேகம் நம்மால் தீர்த்து வைக்கக்கூடியது அல்ல.
அவர் தனது தலைவர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்கள் என்று நினைக்கின்றவர்களின் மறுபக்கம் – அல்லது அவருக்குத் தெரியாத பக்கத்தையும் எங்களுக் குத் தெரியும் என்று அவருக்கு சொல்லுங்கள் என்றேன். ஈழநாடுவின் நோக்கம் இப்படி பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது ரணிலை வெல்லவைக்க என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ, அநுரகுமாரவிற்குத்தான் வடக்கு,கிழக்கு தமிழர்கள் வாக்களிக்கப்போவதில்லை,
அப்படியெ னில் பொதுவேட்பாளரால் நேரடியாக நன்மையை பெறவிருப்பவர், அவர்தானே. இது சீனாவை மகிழ்ச் சிப்படுத்துவதற்கான மறைமுக வேலைத்திட்டம் என்கிறார்கள் சிலர். இவர்கள் சொல்ல வருவது என்ன? ஏதோ ஒரு சிங்கள வேட் பாளருக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை கிடைக்காமல் பண்ணுவதற்கான முயற்சி என்கிறார்கள்.
அவர்கள் இப்படிச் சொல்வதன் மூலம், இன்னுமொரு சாரார் முன்வைக்கும் ஒரு பிரதான குற்றச் சாட்டையே தகர்த்துவிடுகிறார் கள். தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட் டால், இதுநாள்வரை நடந்து வந்த அனைத்துப் போராட்டங்களுமே பயனற்றதாகிவிடும் என்றும் தமிழ் மக்களே, தமது கோரிக்கைகளை நிராகரித்துவிட்டார்கள் என்று தெற்கும் சர்வதேச சமூகமும் ஏளனம் செய்யுமே என்று எச்ச ரிக்கை விடும் பாணியில் சிலர் கருத்துச் சொல்லி வருகின்றனர்.
அவ்வாறு சொல்பவர்கள், எதற்காக ரணிலை வெல்லவைப்பதற்கான முயற்சி என்கிறார்கள் என்பது கேள்வியாகிவிடுகின்றது. தமிழ் மக்கள் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க இருப்பதை தடுப்ப தற்கான முயற்சி இது என்கின்றனர் சிலர், வேறு சிலர், தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டுவிட்டால் அது நமது போராட்டத்தை மழுங் கடிக்கச் செய்துவிடுமே என்கின்றனர் வேறு சிலர். இரண்டும் ஒன்றை யொன்று முரண்நகையானவை.
இவற்றை விடுவோம், ஈழநாடு- டான் ரிவிக்கு அவர்கள் சொல்வது போல, மறைமுக ‘அஜன்டா’ இருக்கின்றது என்றே வைத்துக் கொள்ளுவோம். ஒரு வேட்பாளரை நிறுத்தி, அவர் என்ன கோரிக்கைக்காக போட்டியிடுகிறார் என்பதையும் தீர்மானித்த பின்னர், அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல- பிரச்சாரம் செய்ய ஊடகங்களின் உதவி தேவைதானே?.
வேட்பாளர் யார் என்பதையோ, அல்லது என்ன கோரிக்கையை முன்வைத்து அவர் போட்டியிடு கின்றார் என்பது பற்றி முடிவெடுப் பதிலோ ஈழநாடுவோ, டான் ரிவியோ எந்த விருப்பத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
எமது கோரிக்கை எல்லாம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரு தேசமாக நிற்கிறார்கள் என்பதை வெளிப் படுத்த இதைவிட சிறந்த சந்தர்ப்பம் இல்லை என்பதுதான். கோரிக்கை எந்த உட்சபட்ச கோரிக்கையாகவும் இருக்கலாம். யார் வேண்டுமானாலும் வேட்பா ளராகவும் இருக்கலாம் என்றுதானே ஈழநாடு திரும்பத் திரும்ப எழுதி வருகின்றது. அதாவது இந்த விடயத்தில் எந்த விருப்பு வெறுப்புக் களையும் திணிக்க முன்வரவில் லையே. அப்படியெனில் நீங்கள் தெரிவுசெய்கின்ற வேட்பாளரை யும், அந்தக் கோரிக்கைக்கான மக்கள் ஆதரவையும் பெறுவதற்கு முன்னணி ஊடகங்கள் என்ற வகையில் உங்களுக்கு உதவ முன்வருவதை எதற்காக நீங்கள் விரும்பவில்லை? அப்படியெனில் நீங்களே அந்த முயற்சியை தோல்வி அடையச் செய்யவேண்டும் என்பதுதான் உங்கள் மறைமுக திட்டமா என்று கேட்காமல் இருக்கமுடிய வில்லை.
அதிகம் ஏன், கடந்த பாராளு மன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அனேகமாக எல்லாக்கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்களும் பணம்கொடுத்து விளம்பரம் செய்யவேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது? இதனை எழுதிக்கொண்டி ருக்கும் போது ஒருநண்பர் முகநூ லில் வந்த பதிவு ஒன்றை அனுப்பி யிருந்தார். அதில் வடிவேலு பாணியில் ஒருவர் எழுதுகிறார்:
‘குகநாதனும் யதீந்திராவும் யாருடைய வழிகாட்டலில் இயங்கு பவர்கள் என்பது பலருக்கு தெரியாது.
வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய மகிந்த குடும்பத்தை மீண்டும் கொண்டு வருவதற்காகவே இந்த தமிழ் பொது வேட்பாளர் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
இதன் மூலம் ரணில் அர சாங்கத்திற்கு இருக்கும் தமிழர்களது ஓட்டுக்களை திசை திருப்பி மஹிந்த குழுமத்தை வெல்ல வைப்பதற்கான நிழல் ஏற்பாடு இதுவாகும்?’. அட மகிந்தவே ரணிலை எப்படி வெல்லவைப்பது என்று தலையை உடைத்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் எல்லாம் அரசியல் கருத் துச்சொல்வது வடிவேலு திரைப் படங்களில் பேசுகின்ற நகைச் சுவையை மிஞ்சிவிடுகின்றது.!
- ஊர்க்குருவி.