26 C
Colombo
Tuesday, May 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

எல்லோரும் ஜனாதிபதி தேர்த லில் கவனம் செலுத்திக்கொண் டிருக்க சத்தம் சந்தடி இல்லாமல் திடீரென்று பாராளுமன்றம் கலைக் கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்று தெற்கில் பரவலாக பேசப்படுகின்றது. ஏற்கனவே, முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறும் அப்படி நடத்தினால்தான் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் வெற்றிபெற முடியும் என்றும் மாறாக முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அதில் வெற்றிபெறுபவரின் கட்சியே அதிக இடங்களில் வெற்றிபெற்று விடும் என்றும் பஸில் ராஜபக்ஷ நீண்டகாலமாகவே ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் அதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை என்ற செய்திகளே வந்துகொண்டிருந்தன.
ஆனால், தனக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து வாராவாரம் கருத்துக்கணிப்பு நடத்துமாறு புலனாய்வாளர்களைக் கேட்டிருந்த ஜனாதிபதி அவர்களிடமிருந்து கிடைக்கும் ‘றிப்போர்ட்டை’ வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு வருகின்றாராம். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தனது பக்கம் வரக்கூடியவர்களை ஜூன் மாதம் நடுப்பகுதிவரை காத்திருக்க சொல்லியுள்ள ஜனாதி பதி அவ்வாறு கணிசமானவர்கள் தன்பக்கம் வருகின்றபோது – தன்மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அதனால் தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் எனவும் நம்புவதாக முன்னர் கூறப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பெருந்தொகையானவர்கள் தன்பக்கம் வருகின்றபோது, அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ சற்று பலவீனமடைவதுடன் அவர் தானாகவே சிலவேளைகளில் போட்டியிலிருந்து விலகலாம் என்றும் முன்னர் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இப்போது பாராளு மன்றத் தேர்தலை முதலில் நடத்தி னால் எந்த ஒரு கட்சிக்குமே அறு திப்பெரும்பான்மை கிடைக்காது என்பதாலும் அவ்வாறு பாராளு மன்றில் ஒரு நிலையான ஆட்சியை அமைக்க எந்தக் கட்சியாலும் முடியாத சந்தர்ப்பத்தில் தனது நிறை வேற்று அதிகாரத்தைப் பயன் படுத்தி இரண்டு கட்சிகளை இணைத்து ஆட்சியை அமைக்க முடியும் என்றும் அவ்வாறு இணைக்கின்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடுவதன் மூலம் இலகுவாக வெற்றியைப் பெறமுடியும் எனவும் ஜனாதிபதித் தரப்பில் இப்போது கணக்குப் போடப்படுகின்றதாம்.
தன்னோடு வரத் தயாராக இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி யினரையும் பாராளுமன்றத் தேர்த லில் அந்தக் கட்சியில் போட்டி யிட்டு அவர்கள் வெற்றி பெற்றா லும் ஆட்சியமைக்க போதுமான பலம் இல்லாமல் போனால், அவர்கள் ஆளும் தரப்புக்கு மாறுவதற்கு யோசிக்க மாட்டார்கள் என்றும் அது எதிர்பார்க்கப் படுவதையும்விட அதிகமானவர் களை பிரித்தெடுக்க உதவும் எனவும் கணக்குப் போடப் படுகின்றதாம். அதேவேளை, இன்று பிரதான போட்டியாளர்களாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கு நட்சத்திர வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை.
ஆனால், ஜனாதிபதி தேர் தல் என்றால் அதில் அநுர குமார திஸநாயக்கா ஒருவரே போட்டி யிடுவதால் அவர் நாடு முழுவதிலும் நட்சத்திர வேட்பாளராக இருப் பார். ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற போது அவரோடு சேர்ந்து போட்டியிடுகின்றவர்கள் எவருமே அந்த அளவுக்கு அறிமுகமானவர்க ளாக இருக்கப் போவதில்லை.
உதாரணமாக கொழும்பில் சம்பிக்க, தினேஷ் குணவர்த்தன, சஜித், பந்துல குணவர்த்தன, ரவி கருணாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, விமல் வீரவன்ஸ, கம்மன்பில என்று ஒரு பட்டாளமே களத்தில் நிற்கும். இவர்களை விழுத்தி வெற்றிபெறக் கூடிய பலர் ஜே. வி. பியிடம் இல்லை. இதனால், ஜனாதிபதி தேர்தலில் பெறக்கூடிய அளவுக்கு அவர்களால் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு களை திரட்சியாகப் பெறமுடியாத நிலையே ஏற்படும்.
இது, அதன்பின் னர் நடக்கின்ற ஜனாதிபதி தேர்த லில் ரணில் தரப்புக்கு இலகுவாக இருக்கும். அப்படி இரண்டு தேர்தல்களை யும் இந்த வருடத்திலேயே நடத்தி முடிக்க முடியுமா என்பது தெரிய வில்லை. ஆனால், பாராளுமன் றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தற்போது இருப்ப தால், அவர் அதனைக் கலைத்தால் உடனடியாக பாராளுமன்றத்துக்கு தேர்தலை நடத்தவேண்டிய இக்கட்டான நிலைமை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வரவே செய்யும். எல்லாம் இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பதுபோல பொதுஜன பெரமுனவும் தனது பிரசார பணிமனையை நவீன வசதிகளுடன் கூடியதாக அண்மை யில் திறந்து வைத்திருந்ததையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். பாராளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் அது ஒரு ஜனநாயக தேர்தலாக இருக்காது என்பதும், அது ‘பணநாயக’ தேர்தலாகத்தான் இருக்கும் என்ப தும் நாம் எதிர்பார்க்கக்கூடியது தான். மக்கள் இப்போது பசியோடு இருக்கின்றனர். மக்களின் ‘பசியை’ அறிந்து வைத்திருக்கும் அரசியல் வாதிகள் அதனை நன்கு பயன்படுத் தவே முயற்சிசெய்வார்கள் என்ப தால், பணநாயகர்களே அதிகம் வெற்றிபெறுவதற்கும் அதிக சந்தர்ப் பம் இருப்பதாக தெற்கில் ஓர் அரசியல் அவதானி தெரிவித்தார்.

  • ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles