29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்நிறுத்துவது தாங்களே ஊழலுக்கு எதிரானவர்கள் – ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்கக் கூடியவர்கள் என்பதுதான். நாடு பொருளாதார நெருக்கடி யில் சிக்குண்டதற்கு முக்கிய காரணமே இந்த ஊழல் விவகாரம்தான் என்பதும் ஆராய்ச்சிகளுக்கு உரியதல்ல. ராஜபக்ஷக்கள் ஆட்சி பற்றி பலரும் முதலில் முன்வைக்கின்ற குற்றச்சாட்டு இந்த ஊழல் விவகாரம்தான். ஆனால் அண்மையில் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து நிச்சயம் பலருக்கும் கொடுப்புக்குள் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ‘பொதுஜன பெரமுன கட்சியால் மாத்திரமே இந்த நாட்டில் ஊழல் அற்ற ஆட்சியை நடத்த முடியும்’ என்று கூறியிருக்கிறார் நாமல் ராஜபக்ஷ. அதுவல்ல முக்கியமானது.


சில மாதங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் கொழும்பில் நின்றபோது பாட்டாலி சம்பிக்க ரணவக்கவை சந்திக்க விரும்பினார். அவரோடு அந்தச் சந்திப்புக்கு நானும் செல்ல வேண்டியதாயிற்று. சந்திப்பில் கலந்துகொள்வதற்காக அல்ல – நண்பரின் சாரதியாக. அப்போது நண்பர் அவருக்கு சொன்னார் ‘ஜே. வி. பி. அடுத்த தேர்தலில் முக்கிய பிரசாரமாக முன்வைக்கவிருப்பது ஊழல் விவகாரம்தான். அத்தகைய நிலையில் அவர்களுக்கு எதிராகக்களம் இறங்கி கடும் போட்டியைக் கொடுக்கக்கூடியவர் நீங்கள்தான். நீங்கள் பொதுவேட்பாளராக களம் இறங்கினால் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம்..’. இதைச் சொல்வதற்காகத்தான் அந்த நண்பர் அவரையே சந்திக்க விரும்பியிருந்தார் என்பதை பின்னர் அவரின் பேச்சிலிருந்து அறியமுடிந்தது.


இந்தச் சம்பவத்தை இப்போது எழுதுவதற்கு காரணம் தெற்கில் அரசியல் தலைவர்களில் ஊழலுக்கு எதிரானவர் – இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் என்றால் அது பாட்டாலி சம்பிக்கரணவக்கதான். யுத்தம் முடிந்த பின்னர் மகிந்த தரப்பினரோடு அவர் பயணிக்க வேண்டியிருந்தது. அவர் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது மகிந்தவுக்கு யுத்த நடவடிக்கை களில் உதவினார் என்பதால்தான் என்று நினைக்கின்றேன். அதனால் தான் அவரின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயஇ மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி என்ற கூட்டில் அங்கத்துவம் வகித்ததோடு முக்கிய அமைச்சராகவும் இருந்தார். யுத்தம் முடிந்த பின்னர் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் மின்சக்தி அமைச்சராக இருந்த அவர் சில ஆண்டுகளிலேயே மகிந்த அரசிலிருந்து வெளியேறியதுடன்இ பின்னர் மகிந்த அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக்காட்டுபவராக மாறியிருந்தார்.


அவரோடு அண்மையில் தொலைபேசியில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நீண்டநேரம் அவரோடு மனம் விட்டு பேசியிருக்கிறார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கான பிரசார பணிமனையை திறந்து வைப்பதற்கு முன்னதாக நடந்த இந்த சம்பாசணையின்போதுஇ ரணில் சிலவேளைகளில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்தால் சம்பிக்கவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறும் தமது கட்சி அவருக்கு பூரண ஆதரவை வழங்கும் என்றும் கூறியிருக்கிறார் மகிந்தர்.


ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதென்று முடிவுசெய்தால் சம்பிக்கவை அவரோடு இணைந்து பணியாற்றுமாறு கோரிக்கை விடுத்ததுடன் ரணிலுக்கு சிங்கள தேசிய வாதிகளின் வாக்குகள் கிடைப்பது கஷ்டமானது என்பதால் சம்பிக்க அவரோடு இருந்தால் அந்த வாக்குகளை அவர் பெறுவது சுலபமாகி விடும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார். இருவரும் இவ்வாறு பேசிய சில தினங்களிலேயே ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் பிரசார பணிமனையை திறந்துவைத்ததுடன்இ தனது பிரசாரத்தையும் தொடக்கியிருக்கிறார்.


அவரோடு ஏற்கனவே இணைந்துவிட்ட நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான சிறீலங்கா சுதந்திர கட்சியின் பதினேழு பேர் கொண்ட அணியினர் அம்பாந் தோட்டை – அம்பலாந்தோட்டையில் கடந்த வாரம் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி தமது பலத்தை வெளிப்படுத்தியதுடன் ரணிலுக்கான தமது ஆதரவையும் அறி வித்துவிட்டனர். அதாவதுஇ ரணில் போட்டியிடுவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கின்றது. இந்த நிலையில்இ மகிந்தவுடனான பேச்சுகளை அடுத்து ரணிலுடன் இணைவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கிறார் சம்பிக்க என்கின்றன அவருக்கு நெருக்க மான வட்டாரங்கள்.


அவரின் சிறீ லங்கா குடியரசு முன்னணி என்ற கட்சி நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல்இ அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் இயங்கும் புதிய கூட்டணியுடன் நிமல் லான்சாஇ நளின் பெர்னான்டோஇ பிரசன்ன ரணதுங்க அணியுடன் தாமும் கூட்டணி வைத்துக்கொண்டு மெகா கூட்டணியாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவிருக்கிறாராம் சம்பிக்க.

இவர்கள் இவ்வாறு ரணிலுடன் இணைந்து கொண்டிருக்க சஜித்தையும் ரணிலையும் ஓரணியில் கொண்டுவரும் முயற்சியும் குழப்பமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றதாம்.!

ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles