இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41ஆயிரத்து 500 மாணவர்கள் அனுமதி!

0
319

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10, 000 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மருத்துவ பீடங்களுக்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடங்களுக்கு 405 மாணவர்களும் இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இந்நிலையில், 2020 அக்டோபர் 28 திகதி “கம்பஹா விக்கிர மாராச்சி ஆயுள்வேத கற்கை நிறுவனத்தைப் பூரணமான பல்கலைக்கழகம் ” என அறிவிக்கும் வர்த்தமானி அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட் டத்தின் பிரிவு 21 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய ஆணையத் துடன் கலந்தாலோசித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.