முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட இயற்கை எய்திய வர்த்தகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இயற்கை எய்திய வர்த்தகர்களை நினைவு கூர்ந்து புதுக்குடியிருப்பு நகரில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு இயற்கை எய்திய 15 வர்த்தகர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு, அவர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்தினர், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.