இராஜகிராமத்திற்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு!

0
361

பேலியகொட  மீன் சந்தையுடன் தொடர்பானஒருவருக்கு  கொரோணா தொற்று ஏற்பட்டுள்ளதால்  இராச கிராமம்  நேற்றுமுதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது

இராணுவம் போலீசார் யாரும் உட்சென்று வராமலும் வெளியேறாமலும் இருப்பதறக்காக பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படுள்ள இராச  கிராம மக்களுக்கு pcr பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த இராச கிராமத்தில் இருந்தே வடமராட்சி தனியார் போக்குவரத்து சேவையில்  அதிகமான சாரதிகள் நடத்துநர்கள் பணியாற்றிவருவதால் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண வழித்தட சேவை இடை நிறுத்தப்பட்டு வடமராட்சி தனியார் சிற்றூர்தி உரிமையாளர் சங்க அலுவலகமும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளதோடு பருத்தித்துறை நகரின் பிரபல தையல் நிலையமும் இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது.