இராட்சத பூசணிகாயில் அமர்ந்தபடி ஆற்றில் மிதந்து சென்று சாதனை!

0
118

அமெரிக்கர் ஒருவர் இராட்சத பூசணிக்காயில் அமர்ந்தபடி மிசோரி ஆற்றில் 61 கிலோ மீற்றர் மிதந்து சென்று சாதனை படைத்துள்ளார்.
டுவன் ஹன்சென் என்ற அந்த நபர் தனது 60 ஆவது பிறந்த நாளன்று பெலவியூ நகரிலிருந்து நெப்ராஸ்கா நகரம் வரை, 12 அடி சுற்றளவு கொண்ட பூசணியில் மிதந்து சென்றார்.
கரடு முரடான ஆற்றுப்பாதை வழியாக, 11 மணி நேரம் நீடித்த இந்த சாகசப்பயணத்திற்காக தனது வீட்டு தோட்டத்தில் வளர்ந்த 384 கிலோ பூசனியை அவர் பயன்படுத்தினார்.