இருவருக்கு கொரோனா – ஆமர் வீதி பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு

0
227

ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் உள்ள கான்ஸ்டபிள் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (19) காலை அத தெரணவுடன் இணைந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.