நாட்டில் 20வீதமான அத்தியாவசிய மருந்துகள் மட்டுமே உள்ளன. அத்துடன், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு நாட்டில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சந்திக கங்கந்த இதுபற்றி கூறுகையில்,
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், மருந்துகளை இறக்குமதி செய்ய முடியவில்லை.
குழந்தைகள், சிறுவர்களுக்கான எதிர்ப்பு சக்தி சிரப்கள்கூட மருந்தகங்களில் கிடைப்பது கடினம். இந்த மருந்து வகை தட்டுப்பாடு முதியவர்களையும் பாதித்துள்ளது.
இதேவேளை, மருந்து விநியோகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து சுகாதார அமைச்சர் தங்களுடன் பேச வேண்டும் என்றும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.