இலங்கைக்கு உதவியளிக்க ஐ.நா சபையால் ஆதரவு

0
145

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளர். இலங்கை எதிர்கொள்ளும் சமூக பொருளாதார நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் என அன்டோனியோ குட்டேரஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.