இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

0
187

நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,227ஆக உயர்வடைந்துள்ளதுடன் 5,474 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 7,723 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 468 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.