இலங்கையில் தற்போது 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தில் தொற்றுநோய் விரைவாகப் பரவுவதால் பொது மக்கள் தீர்க்கமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாட்டில் வைத்தியசாலையில் நோயாளர்கள் நிறைந்துள்ளதாக மகேந்திர பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.