இலங்கையில் நூறு வயதுக்கு மேற்பட்ட 495 பேர் வாழ்கின்றனர் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

0
67

 இலங்கையில் (Sri Lanka) நூறு வயதுக்கு மேற்பட்ட 495 பேர் வாழ்வதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் 

முதியோர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகைகளை பெற்றுக்கொள்ள இவர்களுக்கும் உரிமை உண்டு என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில்  60 வயதுக்கு மேற்பட்ட 2.7 மில்லியன் மக்கள் உள்ளனர்.

இந்தநிலையில், ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியனைத் தாண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.