24 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் பட்டையை கிளப்பும் GOAT!

பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் GOAT. தளபதி விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என பலரும் இப்படத்தில் நடிக்க வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

உலகளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி நல்ல வரவேற்பை பெற்றுள்ள GOAT திரைப்படம் இலங்கையில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் இலங்கையில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

முதல் நாள் ரூ. 1.5 கோடி வரை இலங்கை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்திருந்த GOAT திரைப்படம், இரண்டாவது நாளில் ரூ. 2 கோடி வரை வசூல் செய்து, மொத்தமாக ரூ. 3.5 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles