தற்போதைய தொற்றுப் பரம்பல் நாளுக்கு நாள் மாறி வருவதாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாலும் இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்திலுள்ளது என சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால், மக்களின் வாழ்க்கை முறையைப் பேணும் வழிமுறைகள் கருதி சுகாதார அமைச்சு நான்காவது எச்சரிக்கை மட்டத்தைப் பிரகடனம் செய்துள்ளது. இந்தத் தொற்றுப் பரம்பல் நீண்ட காலம் நீடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்;.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சில இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும், ஏனைய பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாழ்க்கையையும், தொழில்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது எனத் தெரிவித்தார்.