அமெரிக்காவின் நாணய சுத்திகரிப்பு குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவிடம் இலங்கையை காட்டிக்கொடுக்க முயல்வதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாடட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்றையதினம் ஜனாதிபதியினால் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுஜன பெரமுன அரசில் அங்கம் வகித்த பங்காளிக் கட்சிகளின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த வாசுதேசவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இணைந்து இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பை கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடாத்தினர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கையில், நிதியமைச்சர் பஷிலின் ஜனாதிபதி வேட்பாளர் கனவு எம்மால் இல்லாமல் போனதால் அவருக்கும் பங்காளி கட்சிகளுக்குமிடையில் முரண்பாடு தீவிரமடைந்தது.
இந்த அரசாங்கட் ஆட்சிக்கு வந்திலிருந்து இந்த பிரச்சினை தொடர்ந்த வண்ணமுள்ளது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவும் நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையிலுருந்து மீளும் வழிகளை மாத்திரமே 11 கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கு எடுத்துரைத்தோம்.
குடும்பத்தாரின் அழுத்தங்களினால் ஜனாதிபதி எம்மை பதவி நீக்கியுள்ளார். அது மாத்திரமல்லாது நிதியமைச்சரின் கைப்பொம்மையாக ஜனாதிபதி செயற்படுகின்றார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் கீழ் இருக்கும் எந்தவொரு அமைச்சையும் பெற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. எனெனில் நிதியமைச்சின் செயலாளரைக் கூட கட்டுப்படுத்தாத நிலைமையில் ஜனாதிபதி உள்ளார்.
நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்;ஷவே பொறுப்புக் கூற வேண்டும். அத்துடன், எம்மை பதவி நீக்கியமை குறித்து பிரதமர் மனவருத்தமடைந்துள்ளார்.
அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்தே நாம் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டோம். அந்த வகையில் நோக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரச நிர்வாகத்தில் பலவீனத்தன்மை காணப்படுகிறது.
அரசாங்கம் குறுகிய காலத்தில் பலவீனமடைவதற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை
.அந்த வகையில் நாட்டு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அலங்கோல அமெரிக்கர் இல்லாதொழித்து விட்டார.;
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்காக,
அமைச்சுப் பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச, கம்மன்பில ஆகியோரை வெளியேற்றியமைக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சின் கடமைகளில் ஈடுபடமாட்டேன். அதேபோன்று அமைச்சு நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை,
அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளப்போவதில்லை.
இதன் போது கருத்துரைத்த முன்னாள் மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில
அமெரிக்காவின் சூழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நாம் இனி தொடரவுள்ளோம். அது மாத்திரமல்லாது.
இலங்கையை இந்தோனேசியாவின் கிழக்குத் திமோர் போன்று மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்கஷ செயற்படுகின்றார்.