இலங்கை இந்திய சமுதாய பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட திரு.ராஜு சிவராமன் அவர்களை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தார்.
இலங்கை இந்திய சமுதாய பேரவையின் புதிய தலைவரான திரு.ராஜு சிவராமன் அவர்களை கௌரவிக்கும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது இலங்கை இந்திய சமுதாய பேரவையினால் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு பிரதமர் தமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் திரு.ஜீவன் தொண்டமான், பிரதமர் அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு