மின்சாரக் கட்டணம் மற்றும் இதர விடயங்களில் வெளியாட்களின் தலையீடு காரணமாக, தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய, மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.