இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரு பெண் விமானிகள் நியமிப்பு!

0
279

இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இன்று நடைபெற்ற 61 வது அதிகாரிகளின் கேடட் கமிஷனிங் மற்றும் விங்ஸ் அணிவகுப்பு இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போதே இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.