இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஊடக மன்றத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் அம்பாறையில்கலந்துரையாடல்

0
90

அம்பாறையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் பரஸ்பர ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் ‘பணியக ஊடக மன்றத்தை ஸ்தாபித்தல்’ தொடர்பிலான நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

நிகழ்வானது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், அமைச்சின் உயரதிகாரிகள், பணியகத்தின் உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு சென்று, அதன் பின்னர் நாட்டுக்கு வந்து நன்றாக தொழில் செய்து கொண்டு இருப்பவர்களின் கடந்த கால நிலையை கேட்டறிந்து அவர்களின் தகவல்களை வீடியோ மூலம் பணியகத்திற்கு அனுப்பிய ஊடகவியலாளர்களுக்கு பணப்பரிசும் அமைச்சரினால் வழங்கப்பட்டன.