உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு!

0
245

மீட்புப் பணிக்காக, மனிதாபிமான அடிப்படையில், உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி, 2 நகரங்களில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, வோல்னோவாகா மற்றும் மரியுபோல் நகரங்களில், தற்காலிகமாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப் பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக இந்த போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.
அதேவேளையில், உக்ரைனின், சுமி, கீவ், செர்னிஹிவ் ஆகிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதற்கான எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று 10வது நாளாக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டு உள்ளூர் நேரப்படி, காலை 6 மணிக்கு (இலங்கை நேரப்படி 11.30 மணிக்கு) போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வகையில் ரஷ்யா இந்த போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.