நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார்.
ஏற்கனவே திட்டமிட்ட நேர அட்டவணையின் படியே 04 ஆம் திகதியிலிருந்து பரீட்சைகள மீள ஆரம்பமாகும் என அறிவித்ததையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாட்களுக்குரிய பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.