நாடு முழுவதிலும் தற்பொழுது நடைபெறும் க. பொ. த உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடைபெறுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாணவர்களை கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பினவருமாறு:
நாடு முழுவதிலும் தற்பொழுது நடைபெறும் க. பொ. த உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார்
தற்பொழுது உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 2648 ஆகும். அத்தோடு இவ்வாறு பரீட்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா ரூபா 15, 000 வீதம் இந்த நியியுதவி வழங்கப்படும்.
இந்த நிதியுதவியை இன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணக்கில் வைப்பீடு செய்யுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் வழிநடத்தலின் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கல்வி அமைச்சின் சுகாதார அலகினால் வழங்கப்படும் இந்த நிதி; , தற்பொழுது சம்பந்தப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள்;; உள்ளிட்ட பணியாளர் சபையின் சுகாதார பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள முக கவசம், பாதுகாப்பான ஆடை அணிகளை அணிதல் மற்றும் கிருமிநாசினி சவர்க்காரம் வழங்குதல் போன்ற சுகாதார வசதிகளுக்கு மேலதிகமாக என்ற ரீதியிலாகும்.
இதே போன்று நாடு முழுவதிலும் பரீட்சை மத்திய நிலையங்களில் க.பொ. த உயர் தர பரீட்சை தற்பொழுது எவ்வித பிரச்சினைகளும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக வலய கல்வி பணிப்பாளர்கள் உறுதி செய்வதாகவும் அனைத்து பரீட்சார்த்திகளைப் போன்று சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு ஆகக் கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.