31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலகளாவிய வெப்பநிலை குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை

இந்த நூற்றாண்டின் இறுதியில், உலகளாவிய வெப்பநிலை 3 செல்சியஸினால் உயரக்கூடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

டுபாயில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடான CoP – 28 இல் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.நாவின் 2023 ஆண்டிற்கான சுற்றுச்சூழல் வேலைத்திட்ட அறிக்கையில் “உடைக்கப்பட்ட வாக்குறுதி” குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பூமியின் மூன்று பிரதான பிரச்சினைகளை மட்டுப்படுத்தல் தொடர்பிலான கட்டமைப்பிற்கு வெளியிலிருந்து சிந்திக்க வேண்டும் என்றும், அதற்காக, பூமியில் 44% பரப்பை உள்வாங்கி, உயிரியல் பல்வகைத்தன்மை வெகுவாக காணப்படும் 134 உயர் வெப்ப வலய நாடுகளில் மீள்புதுப்பிக்கதக்க வலுசக்தி உள்ளிட்ட துறையில் முதலீடு செய்வதால் விரைவான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அத்தோடு, வெப்ப வலயம் தொடர்பாக அறிக்கையிடுவதற்கான நிபுணர் குழுவொன்றை நிறுவுதல் தொடர்பிலான திட்டங்களையும் வலியுறுத்தினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles