820 கோடி கொண்ட மக்கள் தொகையில் 4.3 சதவீதம் பேரை பூரண நலமுடன் உள்ளனர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த 1990 முதல் 2013ம் ஆண்டு வரை 188 நாடுகளில் உடல்நலக்குறைவு தொடர்பாக ‘குளோபல் பர்டன் ஒப் டிசீஸ்’ என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: உலகில் 820 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 4.3 சதவீதம் பேர் மட்டுமே நலமுடன் உள்ளனர். மற்றவர்கள் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வுருகின்றனர்.
சமீபத்தில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று இந்த எண்ணிக்கையை அதிகரித்து இருக்கும். பெரும்பாலான மக்கள் முதுகுவலி, மன அழுத்தம், ரத்த சோகை, தொண்டை புண், வயது முதிர்வால் காது கேளாமை ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர்.
50 சதவீத மக்கள் தசை தொடர்பான பிரச்சினைகள், மனநலம், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பானவற்றால் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில், இந்த அமைப்பு உலகளவில் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரித்து இருந்தது. இதன்படி கடந்த 10 ஆண்டில் நீரிழிவால் 53 கோடி பேர் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இன்றைய உலகில் மருத்துவ அறிவியலை காட்டிலும் புதிய நோய்கள் மிக வேகமாக உருவாகி ஆரோக்கியத்திற்கு பெரிய சவாலாக உள்ளது என்பது தெளிவாகிறது.