கொரோனா தொற்றுள்ள நபருடன் தொடர்பு கொண்டதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக அவா் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
தன்னுடன் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் எனவும் தான் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை எனவும் வீட்டில் இருந்தே பணிபுரிகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.