உலக வங்கி பாராட்டு

0
219

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது.

அந்த வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் நேற்று முன் தினம் மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையும் – உலக வங்கியும் பல வருடங்களாக பரஸ்பர நம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாக சர்வோஸ் சுட்டிக்காட்டினார். தற்போதைய தொற்றுப் பரவலை விரைவில் கட்டுப்படுத்த இலங்கையால் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.