ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

0
117

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக
இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்க, ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதிக்கான மகஜரொன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம்
கருணாகரனிடம் கையளிக்கப்பட்டது.
போராட்டத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் கந்தசாமி சத்திய சீலன் மற்றும் மத தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.