எதிர்க்கட்சியினரின் வார்த்தைகளில் தான் வைரஸ் சமூக பரவல் நிலையில் – சுதத் சமரவீர

0
336

பெரும்பாலான நோயாளிகள் ஒரு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் சமூகப் பரவல் இல்லை என விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால், சமூகத் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை,சுகாதார அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் புள்ளி விவரங்களுடன் தகவல்களை வெளியிட்டு வந்தாலும் வந்தாலும், சமூகப் பரவல் நாட்டிலுள்ளது என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றன.

ஆனால்,கொரோனா வைரஸ் இன்னும் சமூகப் பரவல் நிலையை அடையவில்லை. எதிர்க்கட்சியினரின் வார்த்தைகளில் தான் வைரஸ் சமூகப் பரவல் நிலையிலுள்ளது என்று கடுமையாகச் சாடியுள்ளார் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.