பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உரையாற்றுவதற்கு நேரத்தை ஒதுக்கிக்கொடுக்காத அரசாங்கமே தேசிய சபை தொடர்பில் தற்போது கதைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
தேசிய சபை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை தீர்ப்பதே தேசிய சபை உருவாக்கத்தின் நோக்கமெனில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில் மூன்றாவது அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்றளவில் எமக்கு கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம்கூட எமக்கு வழங்கப்படவில்லை.
சபாநாயகர், பிரதி சபாநாயகரின் தலையீட்டை அடுத்தே பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஒரு நிமிடத்தை பெற்றுக்கொள்வதற்காக நான் யாசகரை போன்று பிரதி சபாநாயகரிடம் கெஞ்சியுள்ளேன்.
அவ்வாறான ஒரு அரசாங்கமே தேசிய சபை தொடர்பில் தற்போது கதைக்கின்றது.
அனுரகுமார திசாநாயக்க கூறியதை போன்று, தேசிய சபை என்ற விடயம் 11 கட்சிகள் ஒன்றிணைந்து ஏப்ரல் மாதத்தில் முன்வைத்த யோசனையாகும்.
எனினும் அந்த யோசனையின் தேவைப்பாடுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்துப் பார்க்காது புரிந்துக்கொள்ளாதே தேசிய சபை தொடர்பிலான யோசனை பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவே நாம் பார்க்கின்றோம்.